இந்தியா, ஜூன் 26-
ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதற்கான காரணத்தை பயில்வான் கூறி இருக்கிறார்.கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.
இப்படி சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, விரைவில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படி இவர்களது விவாகரத்து விவகாரம் புயலை கிளப்பி உள்ள நிலையில், அதுகுறித்து மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதன்படி ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சண்டை ஏற்பட அவரது மாமியார் தான் காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “ஜெயம் ரவி மாமியார் சுஜாதா மிகப்பெரிய பணக்காரர். கல்பனா ஹவுஸ் என்கிற பங்களாவின் ஓனரான சுஜாதா, தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
ஆர்த்தியை திருமணம் செய்தபின்னர் வீட்டோடு மாப்பிள்ளை ஆனார் ஜெயம் ரவி. ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் சரியத் தொடங்கிய பின்னர் அவரை வைத்து படம் தயாரிக்க தொடங்கினார் அவரது மாமியார் சுஜாதா. அப்படி அவர் தயாரித்த படம் தான் சைரன். அது முதலுக்கு மோசமில்லாத படமாக அமைந்தது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார் சுஜாதா.
இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி ரூ.25 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால் உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே என அவரது மாமியார் கூற, ஜெயம் ரவி ரூ.25 கோடி வேண்டும் என விடாப்பிடியாக நின்றார். பின்னர் இயக்குனர் பாண்டிராஜை அழைத்து படத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுமாறு கூறி இருக்கிறார். அது செட் ஆகாது என தெரிந்ததும் பாண்டிராஜ் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இது ஜெயம் ரவிக்கு தெரியவர, இதற்கெல்லாம் மாமியார் தான் காரணம் என மனைவி ஆர்த்தி உடன் சண்டை போட்டு இருக்கிறார். அதுதான் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது” என பயில்வான் தெரிவித்துள்ளார்.