பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது பண்டிகை நாளை ஒட்டி தான் திரையரங்குகளில் ரிலீசுக்கு வரும். காரணம் அன்றைக்கு குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவதற்காக அனைவரும் தியேட்டர்களுக்கு போவார்கள். அத்துடன் விடுமுறை நாட்கள் அன்று படங்களை ரிலீஸ் செய்தால் வசூல் அளவில் கல்லாகட்ட முடியும் என்பதால் தான்.
அதிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 3 நாட்கள் லீவு வருவதால் பெரிய லாபத்தை பார்த்து விடலாம் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்னென்ன படங்கள் வருகிறது என்று பார்க்கலாம். அந்த வகையில் பல வருட காலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் ஏலியன்ஸ் கதையை மையமாக வைத்து இயக்குனர் ராம்குமார் எடுத்திருக்கிறார்.