Dec 5, 2025
Thisaigal NewsYouTube
முயற்சியைக் கைவிடாத இயக்குனர் ஷங்கர்
சினிமா

முயற்சியைக் கைவிடாத இயக்குனர் ஷங்கர்

Share:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியைத் தழுவின. இதைத் தொடர்ந்து இந்தியன் 3 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வேள்பாரி படத்தை இயக்கவிருப்பதாக ஷங்கர் கூறினார்.

எந்திரன்தான் தனது கனவுத் திட்டம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. வேள்பாரிதான் தற்போது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் படம். அது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அல்லது 'அவதார்' போன்ற உலகத் தரத்திலான படமாக இருக்கும் என அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்தியன் 3 படத்தின் பணிகளை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வேள்பாரி படப்பிடிப்பைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா அல்லது விக்ரமுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம். ஆனால், எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வேள்பாரி படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி எனக் கூறப்படுகிறது. இது உண்மை என்றால் ஷங்கர் இயக்கத்தில் உருவான படங்களில் மிகப் பெரிய பட்ஜெட் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News