2001-ல் வெளியான சிட்டிசன் தனிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம். பல்வேறு வேடங்களில் அஜித் நடித்த இப்படம் சிறப்பாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த படத்தின் முதன்மை தேர்வு அஜித் அல்ல, உலகநாயகன் கமல்ஹாசன் என்பதுதான் புதிய தகவல்.
சிட்டிசன் படத்தில் 8 வெவ்வேறு வேடங்களில் நடித்த கதாநாயகனாக முதலில் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என தயாரிப்பு குழுவில் முடிவு செய்யப்பட்டிருந்தது. படத்துக்குக் கதையைக் கேட்ட உடனே கமல்ஹாசன் சார் பெயர்தான் எல்லோர் மனதில் வந்தது. அவரின் வேடமாற்ற திறமை, கதையின் வலிமைக்கு சரியாக பொருந்தும் என நினைத்தோம் என அதன் இயக்குநர் கூறியுள்ளார்.
அந்த சமயம் கமல் ஹே ராம் படத்தில் பரபரப்பாக இருந்ததால், “கொஞ்சம் நேரம் கொடுங்க, பண்ணலாம்” என்று கூறினாராம். ஆனால் போதுமான நேரம் இல்லாததால், அஜித் குமாருக்கு அப்படம் சென்றது.