Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பாரம்பரிய முறைப்படி நடிகை அமலா பாலுக்கு கிராண்ட் ஆக நடந்து முடிந்த வளைகாப்பு
சினிமா

பாரம்பரிய முறைப்படி நடிகை அமலா பாலுக்கு கிராண்ட் ஆக நடந்து முடிந்த வளைகாப்பு

Share:

இந்தியா, ஏப்ரல் 05-

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்த அமலா பால், அடுத்தடுத்து தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ் என பான் இந்தியா அளவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு, ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார் அமலாபால். தன்னுடைய பிறந்தநாளன்று காதலனை அறிமுகப்படுத்திய அவர், ஒரே வாரத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார். அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடியின் திருமணம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

கர்ப்பமாக இருந்த போதிலும் அவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ஆடுஜீவிதம் படத்திற்காக பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் அமாலா பால். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுக்கும் நடிகைகள் மத்தியில் கர்ப்பாமாக இருக்கும்போதே புரமோஷனில் அவர் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில் அமலா பால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் உடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Related News