திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது.
மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டுள் ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது
ஆம்!! அடக்க நினைத் தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந் தது.
லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சை யை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.