கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
பயணம் மற்றும் இரசனையை இணைக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’ என்ற உணவுப் பயணத் தொடரின் சீசன் 8 முதல் ஒளிபரப்பை அனைத்து மலேசியர்களும் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம். வழக்கமான உணவு வகைகளைக் காட்டுவதைக் கடந்து, இந்தத் தொடர் உணவு ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும்.
பி.ஜி.டபல்யு என்று அன்பாக அழைக்கப்படும் பன்முகத் திறமைக் கொண்ட பால கணபதி வில்லியமால் இயக்கித், தயாரித்து மற்றும் தொகுத்து வழங்கப்படும் ரசிக்க ருசிக்க ரீலோடட் சீசன் 8, ரசிக்க ருசிக்க சீசன்களின் வரலாற்றிலேயே முதல் முறையாக மலேசியா முழுவதுமான சுவையான உணவுகளை ரசிகர்களுக்குக் கொண்டு வருகிறது. இந்த 26 அத்தியாயங்கள் கொண்ட உணவுப் பயணத் தொடர், சாலையோர உணவுக் கடைகளில் கிடைக்கும் மலிவான உணவுகள் முதல் ஆடம்பரமாக சிறந்த உணவகங்களில் வழங்கப்படும் ஆடம்பரப் பிரீமியம் உணவுகள் வரைப் பல்வேறு வகையானச் சுவையான உணவுகளை அறிமுகப்படுத்துகிறது.
மலேசியாவின் பிரியமானத் தேசிய உணவான நாசி லெமாக் முதல் சைவ மற்றும் அசைவ உணவுகள், சீஸ் உணவுகள், இரவு உணவுகள், சுவையான நாசி கண்டார், நறுமண வாழை இலை உணவுகள், நாவில் நீர் ஊறும் பர்கர் வகைகள், சுவையானக் கடல் உணவுகள், தனித்துவமானப் பிரியாணி வகைகள், வளமானப் பன்முக நூடுல்ஸ் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பலவற்றை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கலாம்.
ரசிக்க ருசிக்க ரீலோடட் சீசன் 8-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.