முன்னணி இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக கங்குவா படம் வெளிவந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
மேலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. கங்குவா படத்திற்கு பின் இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக என்ன படம் பண்ணப் போகிறார், யார் அதில் ஹீரோ என்பது குறித்து பெரிதும் தகவல்கள் வெளிவரவில்லை.
விஜய் சேதுபதியுடன் அவர் இணையப் போவதாக அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. ஆனால், அது உண்மையில்லை என பின் தெரியவந்தது.
ஆனால், தற்போது வெளிவந்துள்ள அண்மைய தகவல் என்னவென்றால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ரத்தினச் சுருக்கமாக கதை கூறியுள்ளாராம் இயக்குநர் சிறுத்தை சிவா. இதற்கு விஜய் சேதுபதி படத்தின் முழு கதையையும் கேட்டுள்ளார். இதனால் விரைவில் இவர்களுடைய படம் குறித்து அறிவிப்பு வரலாம் என திரை வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.