Jul 22, 2026
Thisaigal NewsYouTube
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!
சினிமா

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!

Share:

ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கூட்டாளி என்று கூறப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த சில வாரங்களுக்கு முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து சில கைது நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்படும் சாம்போ செந்தில் என்பவரின் கூட்டாளி வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணன் உடன் இயக்குனர் நெல்சன் மனைவி உரையாடியதாகவும் 75 லட்சம் பணம் நெல்சன் மனைவி வங்கி கணக்கில் இருந்து மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மோனிஷா தரப்பிலிருந்து அவரது வழக்கறிஞர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’மொட்டை கிருஷ்ணனுக்கு 75 லட்சம் மோனிஷா பணம் வழங்கியதாக கூறப்படும் தகவல் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது, இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப கூடாது, ஏற்கனவே இது போன்ற தகவல்கள் பரப்பியிருந்தால் அவை நீக்கம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது