Oct 20, 2025
Thisaigal NewsYouTube
தக் லைஃப் -ல் ஜெயம் ரவி, துல்கர் சல்மானுக்குபதில் நடிக்கப் போகிறவர்கள் யார்?
சினிமா

தக் லைஃப் -ல் ஜெயம் ரவி, துல்கர் சல்மானுக்குபதில் நடிக்கப் போகிறவர்கள் யார்?

Share:

இந்தியா, மார்ச் 29-

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டு, படத்தில் நடிப்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு விமரிசையாகத் தொடங்கியது.

முதல்கட்டப் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். செர்பியாவில் நடந்த இரண்டாம்கட்டப் படப்பிடிப்பில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் காரணமாக கமலால் கலந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 19 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தக் லைஃபில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதாக கூறினர். இதில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும், படத்திலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் கால்ஷீட் அளித்த தேதிகளில் படப்பிடிப்பை நடத்தாமல், அவர்கள் வேறு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் கால்ஷீட் கேட்டதால், வேறு வழியின்றி படத்திலிருந்து விலகியுள்ளனர்.

துல்கர் சல்மானுக்குப் பதில் சிம்புவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதுபோல், ஜெயம் ரவி வேடத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க யோசித்து வருகின்றனர். கமல் தயாரிப்பில் சிம்பு தற்போது ஒரு படம் நடிக்கிறார். மேலும், மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, அருண் விஜய் இருவருமே நடித்திருந்தனர்.

தக் லைஃப் படப்பிடிப்பு ஏப்ரல் 19 தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. இவர்கள் இருவரும் தக் லைஃபில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக மணிரத்னத்தின் அலுவலக வட்டாரம் கூறுகிறது.

Related News