Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஒரு கோடி கொடுத்தா கூட நான் பண்ணமாட்டேன்... என் மகன் ஸ்ரீஹரி முதல் படத்திலேயே தைரியமா பண்றான்- வனிதா நெகிழ்ச்சி
சினிமா

ஒரு கோடி கொடுத்தா கூட நான் பண்ணமாட்டேன்... என் மகன் ஸ்ரீஹரி முதல் படத்திலேயே தைரியமா பண்றான்- வனிதா நெகிழ்ச்சி

Share:

மகன் ஸ்ரீஹரி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் எமோஷனலாக பேசி இருக்கிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, ஆகாஷ் என்பவரை தான் முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் உள்ளார். ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் வனிதா. விவாகரத்துக்கு பின் தன் தந்தையுடன் சென்றுவிட்டார் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, இதனால் தற்போது தன் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

சினிமாவில் பிசியாக நடித்து வரும் வனிதா, தற்போது அந்தகன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் படு பிசியாக நடந்து வருகிறது. அந்த வகையில் அந்தகன் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட வனிதா, தன் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாகி உள்ளது குறித்து நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார்.

Related News