Dec 17, 2025
Thisaigal NewsYouTube
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த தகவல்
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த தகவல்

Share:

கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அடுத்து பிரதீப் இயக்கி, நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்த ரசிகர்கள் பிரதீப் பிரதீப் என கொண்டாடினார்கள்.

இதையடுத்து டிராகன், டியூட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தைப் பெற்றார். கடைசியாக பிரதீப் நடிப்பில் டியூட் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கும் ஊக்கமளிக்கும் ஆதரவுதான்.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைய உள்ளாராம். இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி, கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sci-Fi கதைக்களம், இளைஞர்களை கவரும் காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் புதிய படம் பற்றி அடுத்த 2 வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த தகவல் | Thisaigal News