Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அம்பானி குடும்ப திருமணத்தில் மாடர்ன் ஆடையில் ‘ஷாக்’ கொடுத்த ஜான்வி கபூர்.. ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்!
சினிமா

அம்பானி குடும்ப திருமணத்தில் மாடர்ன் ஆடையில் ‘ஷாக்’ கொடுத்த ஜான்வி கபூர்.. ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்!

Share:

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது ஜான்வி வெளியிட்ட ரீசன்ட் போட்டோசூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் ஆவார்கள்.

நடிகை ஜான்வி கபூர் அம்பானி திருமணத்தின் 2வது நாளில், 1வது நாளில் இருந்ததைப் போலவே அசத்தலாகத் தெரிந்தார். திவா, தருண் தஹிலியானியின் ஆடை வடிவமைப்பில் இருந்து உருவான ஒரு நேர்த்தியான ஆடையை அணிந்துள்ளார்

முதல் நாள் பெஜ்வெல்ட் கவுனில் திகைக்க வைத்த ஜான்வி, 2வது நாளில் கர்செட் மற்றும் ஸ்கர்ட் லுக்குடன் மிகவும் கவர்ச்சியான லுக் உடன் இருக்கிறார்.

புடவையுடன் அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கோர்செட் மேற்புறத்தை இணைத்து, பாரம்பரிய நேர்த்தி மற்றும் நவீன நளினத்தை வெளிப்படுத்தியது.

நடிகை ஜான்வி கபூரின் இந்த ஸ்டைலிஷ் லுக்கான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு லைக்குகளை தட்டி விட்டுவருகிறார்கள்

Related News