தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ந்தேதி காலமானார்.
அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி இன்று அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி கூறுகையில்,
வருகிற ஜன.19-ந்தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும்.