அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் பயன்படுத்தி இருப்பதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டு அதன் பின் மாற்றங்களுடன் மீண்டும் வெளியானது.
சோனி நிறுவனத்திடம் குட் பேட் அக்லீ தயாரிப்பாளர் அனுமதி வாங்கி இருந்த நிலையில் தற்போது வழக்கு இளையராஜா vs சோனி நிறுவனம் இடையே தான் நடந்து வருகிறது.
சோனிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இளையராஜா தரப்பு "Dude படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
அதை கேட்ட நீதிபதி அதற்கு தனியாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார். இதனால் விரைவில் Dude படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்வார் இளையராஜா என எதிர்பார்க்கப்படுகிறது.








