தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில்
கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர்
பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து, கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி
இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'கார்த்தி 26' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.