Jan 15, 2026
Thisaigal NewsYouTube
கை முழுவதும் ரத்த காயம்.. ரித்திகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
சினிமா

கை முழுவதும் ரத்த காயம்.. ரித்திகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Share:

கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.

இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.

இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது.

மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Related News