Oct 18, 2025
Thisaigal NewsYouTube
RM10,000 ரொக்கப் பரிசுடன் முதல் நிலை வெற்றியாளரை அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 அறிவித்தது
சினிமா

RM10,000 ரொக்கப் பரிசுடன் முதல் நிலை வெற்றியாளரை அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 அறிவித்தது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 22, 2022 – ஒன்பது இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையேயானக் கடுமையானப் போட்டியைத் தொடர்ந்து, விக்னேஸ்வரி த/பெ சுப்ரமணியம் நேற்று அஜெண்டாச் சூரியா ஷாப்பிங் கார்னிவல், புக்கிட் ஜாலில், கோலாலம்பூரில் நடைப்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-இன் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். வீட்டிற்கு ரிம 10,000 ரொக்கப் பரிசை தட்டிச் சென்றதோடு டிவி அல்லது வானொலித் தொகுப்பாளராகப் பணியைத் தொடங்கும் வாய்ப்பையும் பெற்றார்.

ஆஸ்ட்ரோவின்இந்தியவாடிக்கையாளர் வணிகப் பிரிவுத்துணைத் தலைவர், பிரேம் ஆனந்த்கூறுகையில், “உள்ளூர் திறமையாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ள வேளையில், மூன்று நேர்முகத்தேர்வுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தப் பல ஆர்வமுள்ள உள்ளூர் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களுக்கு அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 வாய்ப்பு வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விக்னேஸ்வரி த/பெ சுப்ரமணியம் அவர்களின் தகுதியான வெற்றிக்கும் பிற இறுதிப் போட்டியாளர்களின் முயற்சிகளுக்காகவும் அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம்.”

விக்னேஸ்வரி த/பெ சுப்ரமணியம்,அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-இன்முதல் நிலை வெற்றியாளர்கூறுகையில், “திறமையானப் போட்டியாளர்களுக்கு இடையேக் கடுமையானப் போட்டி நிலவியது. சவால்களை எதிர்கொண்டாலும் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-இன் வெற்றியாளராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் போட்டியை ஏற்பாடுச் செய்து, ஆர்வமுள்ள உள்ளூர் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கிய ஆஸ்ட்ரோ, யு மொபைல் மற்றும் ஏஎஸ்சி அஜெண்டாச் சூரியா கம்யூனிகேஷன் ஆகியோருக்கு நன்றிக் கூறிக் கொள்கிறேன். இந்த வெற்றியை எனதுப் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.”

செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 15 வரை ஜொகூர் பாரு, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெற்ற நேர்முகத்தேர்வுகளின் வழி ஒன்பது இறுதிப் போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேல் விபரங்கள், ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Related News