அக்டோபர் 15-
’சிறகடிக்க ஆசை’ சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" என்ற சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னணி இடத்தை ஒவ்வொரு வாரமும் பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், "சிறகடிக்க ஆசை" சீரியலில் முத்து என்ற ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்துக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர் சீரியல் நடிகை வைஷூ சுந்தர் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று வெற்றி வசந்த் மற்றும் வைஷூ சுந்தர் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து, "சிறகடிக்க ஆசை" ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.