Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி- ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்
சினிமா

இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி- ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

Share:

திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.

இந்நிலையில், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடுகளை தன் இசையின் வழியே களைந்த இசை மேதை இளையராஜா.

திரையிசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வோர் இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையைச் செய்ய ஊக்கமளிக்கிறது.

இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா. இமாலயச் சாதனை, எளிமை ஒருங்கிணைந்த மாமனிதர். தமிழக அரசின் பாராட்டு விழாவை இளையராஜாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன் என ஏ.ஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Related News