இந்தியா, மே 10-
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ராயன்' படத்தின் கதை இதுதான் என்று, கதை ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான போது, அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்த நடிகர்களில் தனுஷும் ஒருவர். தன்னுடைய தோற்றத்தை வைத்து கிண்டல் கேலி செய்தவர்கள் பலர் ஆச்சர்யப்படும் அளவுக்கு, மிக குறுகிய வருடத்தில் வளர்ந்து காட்டினார். தனுஷின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அவரின் சகோதரர் செல்வராகவன் தான். இதனை பல முறை, தனுஷே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்.

ஆனால் தன்னுடைய அண்ணனும், குருவுமான செல்வராகவவே கற்பனை கூட செய்யாத அளவுக்கு தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றார் தனுஷ். இவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ஐஸ்வர்யா என்றால் அது மிகையல்ல. காரணம் தனுஷ் இன்று ஆங்கிலத்தை சரளமாக பேசவும், அவருக்குள் ஒளிந்திருந்த மற்ற திறமைகளும் வெளிப்பட்டது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூலம் தான்.
இப்படி பல விஷயங்களை நினைத்து தான், தனுஷ் கடைசி வரை ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ நினைத்தார். ஆனால் ஐஸ்வர்யா தன்னுடைய விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தது மட்டும் இன்றி... விவாகரத்து மனுவை குடும்ப நல நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார்.

ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு பின்னர், திரைப்படம் மற்றும் ஆவணப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தனுஷும் தன்னுடைய பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்காமல், தானே இயக்கி நடித்துள்ளார். மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

இந்தப்படத்தில் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் தனுஷ் இறக்கி உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. "அதாவது தனுஷின் குடும்பத்தை கொலை செய்து விடுகின்றனர் சிலர். தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உதவியுடன் தேடி செல்லும் தனுஷ், ஒரு Under world-க்குள் செல்ல, அதன்பின் என்ன நடந்தது, தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கினாரா கொலைக்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணம் என்ன? என்பதை எதிர்பாராத கோணத்தில் இயக்கி உள்ளாராம். இதுவே இந்தப்படத்தின் கதை என கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு இது உண்மை என்பது தெரியவில்லை.