அண்மைய காலமாக தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து செய்திகள் அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் என முக்கியப் புள்ளிகளின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்கள் வருகிறது. அதன்பின், நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில், அது வெறும் புரளிதான் என்பது தெரிய வருகிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழு உடனடியாக அங்கு சென்று சோதனை செய்தனர்.
அச்சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்பது தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.








