Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கேப்டன் - இரு துருவங்களுக்கு இடையே சாதித்து காட்டிய ஹீரோ
சினிமா

கேப்டன் - இரு துருவங்களுக்கு இடையே சாதித்து காட்டிய ஹீரோ

Share:

1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.

செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70-களின் மத்தியில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ்.

கதாநாயகனாகவே நடிக்க விரும்பியதால், திரைப்படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் அனைத்தையும் துணிச்சலாக உதறி தள்ளினார்.

இருந்தாலும், ஆரம்பத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை.

பல போராட்டங்களுக்கு பிறகு அப்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எம்.ஏ. காஜா இயக்கத்தில் "இனிக்கும் இளமை" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

திரைப்படத்திற்காக "விஜயகாந்த்" என மாற்றப்பட்ட அவர் பெயர், காலமெல்லாம் அவருக்கு நிலைத்தது.

பிறகு விஜயகாந்த் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன.

1980ல் கே. விஜயன் இயக்கத்தில் அவர் மீனவராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய "தூரத்து இடி முழக்கம்" திரைப்படம் தேசிய விருது வென்றது.

இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதை அடுத்து, பிற இயக்குனர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள தொடங்கினர்.

1981-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் (நடிகர் விஜய் அவர்களின் தந்தை) இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார்.

மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம், அதன் இயக்குனருக்கும் ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் நடிக்க விரும்பிய போது, "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தைத்தான் ரீமேக் செய்து நடித்தார்

Related News