Oct 16, 2025
Thisaigal NewsYouTube
என் பாடல்களை ஹிந்தியில் கேட்கப் பிடிக்கவில்லை.. ஏ.ஆர்.ரஹ்மான்
சினிமா

என் பாடல்களை ஹிந்தியில் கேட்கப் பிடிக்கவில்லை.. ஏ.ஆர்.ரஹ்மான்

Share:

தமிழ் சினிமா பெருமையாகக் கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இப்போது இந்திய சினிமாவைத் தாண்டி உலகளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

தமிழ்மொழி மட்டுமின்றி பல இந்தி பாடல்களையும் இசையமைத்து உள்ளார். இந்நிலையில், இந்தி மொழி கற்றுக் கொண்டது தொடர்பாக ஒரு பேட்டியில் கமல் மகள் ஸ்ருதிஹாசனிடம் பகிர்ந்திருக்கிறார்.

அதில், " நான் திரைத்துறைக்கு வந்தபோது என்னுடைய தமிழ் பாடல்கள் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் தமிழ் வரிகளை அப்படியே ஹிந்தியில் மாற்றும்போது அர்த்தங்கள் மாறின. ராகத்தில் சேராத சிக்கல்கள் இருந்தன.

ஹிந்தி ரசிகர்க்ச்ளும் என்னுடைய பாடல்களை ஹிந்தியில் கேட்கப் பிடிக்காமல் தமிழில்தான் கேட்டார்கள். அப்போது பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காய் என்னிடம், நீங்கள் ரொம்ப நல்ல இசையமைப்பாளர்.

ஹிந்தி தெரியாமல் பாலிவுட் படங்களுக்கு இசையமைக்க முடியாது என்றார். இதனால் இந்தி கற்றுக் கொண்டு தமிழ் பாடல்களை இந்தியில் அப்படியே மொழிபெயர்க்காமல் புதிதாக இந்தியில் பாடல் வரிகள் எழுதப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

Related News