Oct 19, 2026
Thisaigal NewsYouTube

கொடிக்கு பின்னணியில் இருக்கும் குட்டி ஸ்டோரி முதல் மாநாடு தேதி வரை; விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ் !!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொடிக்கு பின்னணியில் இருக்கும் குட்டி ஸ்டோரி முதல் மாநாடு தேதி வரை; விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ் !!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் பேசிய நடிகர் விஜய், கொடிக்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருப்பதாக கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் பேசிய நடிகர் விஜய், கொடிக்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருப்பதாக கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் வந்து உரையாற்றினார் விஜய். அப்போது அவர் பேசியதாவது : “நம் அனைவருக்குமே இன்னைக்கு சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

article_image2

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் வந்து உரையாற்றினார் விஜய். அப்போது அவர் பேசியதாவது : “நம் அனைவருக்குமே இன்னைக்கு சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்

நமது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. அது எப்போது என்பதை கூடிய சீக்கிரம் அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக நீங்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வதற்காக நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்திருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களான உங்க முன்னாடியும், தமிழ்நாட்டு மக்கள் முன்னாடியும் கொடியை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்போம். நம்முடைய கொடிக்கும் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. அது என்ன என்பதை நமது மாநாட்டின் போது அறிவிப்போம். அதுவரைக்கு சந்தோஷமா, கெத்தா இந்த கொடியை ஏற்றி கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்.

இதை உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவோம் எனக்கு தெரியும். அதுவரையும் தைரியமாக இருங்கள். வெற்றி நிச்சயம். நல்லதே நடக்கும் என கூறி சென்ற விஜய், பின்னர் மீண்டும் மேடையேறி வந்து, ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். என்னுடைய அப்பா, அம்மா இங்க வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதைப்பார்த்த அவரது பெற்றார் பெருமையில் பூரித்துப் போயினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →