இந்தியா, மார்ச் 28 -
இயக்குனர் வெங்கட் பிரபு இப்போது விஜய்யின் கோட் படத்தை இயங்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றதால் விஜய் அங்கு சென்று இருந்தார். அவருக்கு ஏக போக வரவேற்பை கேரள ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபுவுக்கு டஃப் கொடுக்க வகையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இயக்குனராக களம் இறங்கி உள்ள இவர் லைக்கா தயாரிப்பில் முதல் படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோ என்பது தற்போது வரை குழப்பத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து தான் ஜேசன் சஞ்சய் படம் எடுக்க உள்ளாராம். சமீபாலமாக கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய வெளியாகி தோல்வியை தழுவி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படமும் இந்த ஜானரில் தான் வெளியானது.
ஆனால் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றால் அது வெங்கட் பிரபுவின் சென்னை 600028 படம் தான்.
இப்போது வெங்கட் பிரபுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தான் ஜேசன் விஜய் படம் எடுக்க உள்ளாராம். அதில் மற்றொரு ட்விஸ்ட் என்னவென்றால் கோட் படத்திலும் கிரிக்கெட் சம்பந்தமான காட்சிகள் இடம் பெறுகிறதாம்.
அதிலும் குறிப்பாக தல தோனி கேமியோ தோற்றத்தில் நடிக்கிறாராம். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்தடுத்த பல தரமான சம்பவங்கள் வர இருக்கிறது.