மலையாள திரையுலகில் நடிகராக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் சௌபின் சாஹிர். இவர் நடிப்பில் ரோமச்சன், மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவை.
இவர் தற்போது கூலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதுவும் தயால் என்கிற கதாபாத்திரத்தில் வெறித்தனமான வில்லனாக கூலி திரைப்படத்தில் மிரட்டி இருந்தார். இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி போல் இவருக்கும் தமிழில் இனி தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அப்படத்தில் நடிக்க அவர் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.