Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்..
சினிமா

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்..

Share:

இந்தியா, ஜூலை 03-

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தனக்கென்று தனி அடையாளத்தை சினிமாவில் உருவாக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் என நடிகர் நெப்போலியன்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிகையும் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் "அன்புள்ள நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம்…!" என பதிவு செய்துள்ளார்.

Related News