இந்தியா, ஜூலை 01-
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தல அஜித் நடிப்பில் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு "துணிவு" என்கின்ற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவரை வைத்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் பிரபல லைகா நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
பின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விளங்கிய நிலையில், இயக்குனர் பொறுப்பை ஏற்றார் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி. ஆனால் அவர் அந்த திரைப்பட பணிகளை ஏற்றுக்கொண்ட பொழுதும், பெரிய அளவில் எந்த விதமான முன்னேற்றங்களும் இல்லாமல் கடந்த ஓராண்டு காலமாக "விடாமுயற்சி" திரைப்படம் பயணித்து வந்தது.
இந்த சூழலில் சென்ற ஆண்டு இறுதி முதல், "விடாமுயற்சி" படபிடிப்பு பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், அஜர்பைஜான் நாட்டில் அப்பட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. முன்பு குறிப்பிட்டவாறு வருகின்ற தீபாவளிக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாவது உறுதியான நிலையில், இன்று மாலை அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தல அஜித் அவர்களுடைய ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளதா என்று கேட்டால் அது சந்தேகமே. ஒரு நீண்ட சாலையில் தல அஜித் நடந்து வருவது போல இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய கெட்டப்பில் எந்தவித மாற்றமும் இல்லை, அதுவே அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
அஜித் அவர்களின் இயல்பான ஒரு புகைப்படத்தை வெளியிட்டது போல உள்ளது, ஒரு First Look என்ற பீல் இதில் இல்லையே என்று ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றே கூறலாம்.