Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வெற்றிமாறன் படத்தில் சிம்பு இரட்டை வேடம்
சினிமா

வெற்றிமாறன் படத்தில் சிம்பு இரட்டை வேடம்

Share:

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம் எனலாம். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்மையில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அடுத்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார். வடசென்னையை மையப்படுத்தி குண்டர் கும்பல் கதையாக இப்படம் உருவாகிறது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில், இப்படம் குறித்து ஓர் அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, எஸ்டிஆர் 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு வீடியோ அடுத்த வாரம் வெளியாகலாம்.

Related News