Oct 18, 2025
Thisaigal NewsYouTube
புகழ்பெற்ற ஹாங் காங் நடிகர் ஜோயெல் சான் மலேசியா வருகை - ரசிகர்கள் மகிழ்ச்சி
சினிமா

புகழ்பெற்ற ஹாங் காங் நடிகர் ஜோயெல் சான் மலேசியா வருகை - ரசிகர்கள் மகிழ்ச்சி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

ஹாங் காங்கைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜோயெல் சான் மலேசியாவில் படப்பிடிப்பு ஒன்றிற்காக வருகை புரிந்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் அவர் அமர்ந்திருப்பது போலான புகைப்படம் ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி வரும் வேளையில், அதனைக் கண்ட ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றின் படப்பிற்காக ஜோயெல் சான் மலேசியாவில் இருப்பதைச் சீன ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில், ரசிகர்கள் பலர் இதனை நம்ப முடியாமல் சமூக ஊடகங்களில் தங்கள் ஆச்சரியங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related News