Oct 17, 2025
Thisaigal NewsYouTube
வேட்டுவம் படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கொடுத்த அதிரடி தகவல்
சினிமா

வேட்டுவம் படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கொடுத்த அதிரடி தகவல்

Share:

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலேயே மக்களின் கவனத்தைப் பெற்றார். அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து இவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.

பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேட்டுவம் படம் குறித்து தகவல் கொடுத்துள்ளார் இயக்குநர். அதாவது, வேட்டுவம் திரைப்படம் அறிவியல் புனைகதை (Science Fiction) படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related News