Oct 20, 2025
Thisaigal NewsYouTube
தளபதி 69' கதையை கமல் மட்டுமல்ல.. வேறு யாருக்கெல்லாம் எச் வினோத் சொன்னார் தெரியுமா?
சினிமா

தளபதி 69' கதையை கமல் மட்டுமல்ல.. வேறு யாருக்கெல்லாம் எச் வினோத் சொன்னார் தெரியுமா?

Share:

18 செப்டம்பர்-

தளபதி விஜய் நடிக்கும் 69 வது திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் கதையில் கமல்ஹாசன் நடிக்க வேண்டியது என்றும் கமல்ஹாசனின் 233 வது படமாக இந்த கதை படமாக உருவாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த படம் டிராப் செய்யப்பட்டதை அடுத்து அதே கதையில் தற்போது விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த கதையை இயக்குனர் எச் வினோத் தயார் செய்ததும் கமல்ஹாசனுக்கு முன்பே விஜய்யிடம் தான் கூறியதாகவும், அப்போது விஜய் ‘மெர்சல்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியிருந்த நிலையில் தான் திடீரென அவர் அஜித் நடித்த அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கச் சென்று விட்டார்.

இதே கதையை அஜித்திடமும் எச் வினோத் கூறியிருந்ததாகவும், ஆனால் அவர் அரசியல் கதை வேண்டாம் என்று தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு விஜய் சேதுபதியிடம் கூறிய நிலையில் தான் பின்னர் உலகநாயகன் கமலஹாசனிடம் கூறப்பட்டது.

கமல்ஹாசன் சில மாற்றங்கள் செய்து இந்த படத்தை தயாரித்து நடிக்க இருந்த நிலையில் தான் மற்ற கமிட்மென்ட் காரணமாக இந்த படம் டிராப் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் விஜய்யிடமே இந்த கதை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த படத்தின் கதையை முதலில் விஜய் இடம் கூறிய நிலையில் அதன் பின்னர் பல பெரிய நடிகர்களுக்கு சென்று மீண்டும் விஜய்யிடமே வந்துள்ளது என்பது தான் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Related News