Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ரவி மோகன் தயாரிக்கும் முதல் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

ரவி மோகன் தயாரிக்கும் முதல் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Share:

அண்மையில் நடிகர் ரவி மோகன், "ரவி மோகன் ஸ்டுடியோ" என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதையும், அந்த நிறுவனத்தின் சின்னம் கூட வெளியானதையும் அறிவோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரவி மோகன் ஸ்டுடியோ தயாரிக்கும் முதல் படத்தில், ரவி மோகன் மற்றும் எஸ்.ஏ சூர்யா என இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’டிக்கிலோனா’, ’வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் "ப்ரோ கோடு" என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் என்பவர் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’அனிமல்’, ’அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் மட்டுமல்லாமல், நான்கு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அது மட்டுமின்றி இரண்டு பான் இந்தியா நடிகர்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News