தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை.
இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.