Jan 16, 2026
Thisaigal NewsYouTube
'துருவ நட்சத்திரம்' வெளியாகும் வரை எந்த படமும் இல்லை என்கிறார் கெளதம் மேனன்
சினிமா

'துருவ நட்சத்திரம்' வெளியாகும் வரை எந்த படமும் இல்லை என்கிறார் கெளதம் மேனன்

Share:

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கவோ அல்லது இயக்கவோ ஒப்புக் கொள்ளப் போவதில்லை என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாவதற்குத் தயாரானது. அதன் பின் பல தேதிகள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதமும், இந்த ஆண்டு ஜனவரி மாதமும் கூட வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப் படத்தையும் தான் இயக்கப் போவதில்லை என்றும், படங்களில் நடிக்கப் போவது கூட இல்லை என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் சரி செய்யப்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனனும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப்போதுதான் வெளியாகும் ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News