தமிழ் சினிமா கொண்டாடும் நம்பிக்கை நட்சத்திரம், பாக்ஸ் ஆபிஸ் கிங், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிக்கும் நாயகன் விஜய். வரும் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள அவரது கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது, படத்திற்கான விளம்பர வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடக்கிறது.
ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடைசி படத்திற்கு கடைசி நேரத்தில் பிரச்சனை தருகிறார்களே என கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். விஜய் சினிமாவில் இருந்து விலகுவது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. மிகவும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
ஜனநாயகன் வெளியாகவுள்ள இந்த நேரத்தில் பிரபல இயக்குனர் விக்ரமன் அவரது இயக்கத்தில் விஜய் நடித்த படத்தின் காட்சிகளை வெளியிட்டுள்ளார். விக்ரமன், சூர்யா-லைலா-சினேகா நடிக்க உன்னை நினைத்து என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடித்துள்ளார். என்னைத் தாலாட்டும் என்ற பாடலில் விஜய்-லைலா நடித்த பழைய வீடியோவை அவர் இப்போது வெளியிட்டுள்ளார்.








