Oct 20, 2025
Thisaigal NewsYouTube
 "ஆண்டவருக்கு" நான் போட்டியா? நோ..நோ.. மிரட்ட வரும் தனுஷின் "ராயன்".. ரிலீஸ் எப்போ? அவரே தந்த அப்டேட்!
சினிமா

 "ஆண்டவருக்கு" நான் போட்டியா? நோ..நோ.. மிரட்ட வரும் தனுஷின் "ராயன்".. ரிலீஸ் எப்போ? அவரே தந்த அப்டேட்!

Share:

இந்தியா, ஜூன் 11-

தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை இப்பொது அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களுடைய மகனாக பிறந்த நடிகர் தனுஷ், கடந்த 2002 ஆம் ஆண்டு அவரது தந்தை இயக்கத்தில் வெளியான "துள்ளுவதோ இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு தனது சகோதரர் செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான "காதல் கொண்டேன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான "திருடா திருடி", "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்", "சுள்ளான்" மற்றும் "தேவதையை கண்டேன்" உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 2006ம் ஆண்டு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான தனுஷின் "புதுப்பேட்டை" என்கின்ற திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு மிகச் சிறந்த ஆக்சன் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான "பா பாண்டி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதாசிரியராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என்று இந்திய மொழிகள் பலவற்றுள் பிஸியான நடிகராக நடித்து வரும் தனுஷின் நடிப்பில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தற்பொழுது திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இந்த சூழ்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு ஏற்கனவே அவருடைய "கேப்டன் மில்லர்" திரைப்படம் வெளியான நிலையில், தற்பொழுது அவருடைய ஐம்பதாவது திரைப்படமான "ராயன்" விரைவில் வெளியாகவுள்ளது. இது தனுஷ் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ஆகும். தற்போது தனுஷ் வெளியிட்ட தகவலின்படி வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி "ராயன்" திரைப்படம் உலக அளவில் வெளியாகின்றது.

Related News