Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சினிமா

கைவிடப்பட்டதா சிவகார்த்திகேயனின் படம்..

Share:

நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது ‘எஸ்.கே.23’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் சமீபத்தில் ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த இரண்டு படங்களை முடித்தபின் இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இயக்குநர் சிபி சக்ரவத்திக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால்தான் இவர்களுடைய கூட்டணி பிரிந்தது என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவத்தி கூட்டணியில் உருவாகி கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘டான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Related News