Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நடிகர் மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
சினிமா

நடிகர் மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

Share:

மெகா ஸ்டார் மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பல தகவல்கள் இணையத்தில் உலா வரும் நிலையில், உண்மை என்ன என்பது குறித்து படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

மலையாள திரையுலகில் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் மம்மூட்டி. உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். 73 வயதாகியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்குச் சவால் கொடுத்து நடித்து வரும் மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் 'MMMN' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்போது நடிகர் மம்மூட்டி ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. அது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மம்முட்டி ரமலான் நோன்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இதனால், படப்பிடிப்பு இல்லை. ஓய்வுக்குப் பின் மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணையவுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related News