இந்தியா, ஜூலை 05-

பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இதனை அடுத்து இவரை இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியமான ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் LIC திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதன்படி இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் லியோ படத்தை தயாரித்த லலித்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் LIC திரைப்படம் ட்ராப் ஆகவில்லை என்றும் கொஞ்சம் பிரேக் எடுத்திருகிறார்கள், விரைவில் படத்தின் பணிகள் நடைபெறும் என்று மற்றொரு தகவலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. எந்த தகவலில் உண்மை இருக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.