Oct 17, 2025
Thisaigal NewsYouTube
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?
சினிமா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

Share:

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் நிஜத்தில் ஜோடியானால் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். நட்சத்திர ஜோடிகள் பட்டியல் எடுத்தால் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

தமிழ் சினிமாவைத் தாண்டி மற்ற மொழிகளில் நட்சத்திர ஜோடிகள் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்கள் இந்த ஜோடி நிஜத்தில் இணைவார்களா என எதிர்ப்பார்க்கப்படுபவர்கள் தான் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி.

இவர்கள் கீதா கோவிந்தம் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க அப்போதே ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கொண்டாடினார்கள்.

தற்போது என்ன தகவல் என்றால் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவருக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது.

திருமணம் அடுத்த வருடத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் படத்தில் திருமணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related News