Jan 16, 2026
Thisaigal NewsYouTube
2 மாத உழைப்பை வீண் பண்ணிட்டிங்களே.. லோகேஷ் கனகராஜின் வேதனை பதிவு..!
சினிமா

2 மாத உழைப்பை வீண் பண்ணிட்டிங்களே.. லோகேஷ் கனகராஜின் வேதனை பதிவு..!

Share:

எங்களது 2 மாத உழைப்பை வீணாக்கி விட்டீர்கள். இனிமேலும் இதுபோல் செய்யாதீர்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'கூலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ 'கூலி’ படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில்: ’எங்கள் படக்குழுவினர் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்து எடுத்த ஒரு காட்சியை, ஒரு வீடியோ மூலம் பகிர்ந்து வைத்து வீணாக்குகிறார்கள். தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை யாரும் செய்ய வேண்டாம். இந்த வீடியோவை யாரும் பார்த்து ஆதரவு தர வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

பெரிய நடிகர்கள், பிரபல இயக்குனர்களின் படங்கள், காட்சிகள் அவ்வப்போது லீக் ஆகி வருகிறது. ஷங்கரின் ’இந்தியன் 2’ படத்தின் காட்சிகளும் கூட இதுபோல லீக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News