Oct 20, 2025
Thisaigal NewsYouTube
Dhanush: இனிமே இப்படித்தான்..அஜித் வழியை பின்பற்ற துவங்கிய தனுஷ் ?
சினிமா

Dhanush: இனிமே இப்படித்தான்..அஜித் வழியை பின்பற்ற துவங்கிய தனுஷ் ?

Share:

இந்தியா, பிப்ரவரி 21 -

தனுஷின் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் தன் ஐம்பதாவது படமான ராயன் பட வேலைகளில் பிசியாக இருக்கின்றார்.

ராயன் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபக்கம் D51 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். வாத்தி படத்திற்கு பிறகு நேரடி தெலுங்கு படமான D51 திரைப்படத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் கூடிய போஸ்டர் வெளியாகி வைரலானது. அதைத்தொடர்ந்து எஸ்.ஜெ சூர்யாவின் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் கதை பற்றிய ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது தனுஷ் ஒரு பாஸ்ட் ஃபூட் கடை நடத்தி வருகிறாராம். அப்போது அங்கெ ஒரு பிரச்சனை நடக்க தனுஷ் ஒரு கேங்ஸ்டர் என தெரிய வருகின்றதாம். எனவே அவர் ஏன் தன் அடையாளத்தை மறைத்து வாழ்கின்றார் என்பதும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் தான் ராயன் படத்தின் ஒரு வரி கதை என்ற தகவல் கிடைத்துள்ளது. என்னதான் இப்படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அண்ணன் தம்பி இடையேயான உறவை சொல்லும் ஒரு எமோஷனலான படமாக இருக்கும் என்றும் தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. தனுஷ் ராயன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போது ஒரு பேட்டியில், நான் நாற்பது வயதை நெருங்கிவிட்டேன். இனி காதல் படங்களில் எல்லாம் நடிக்கமுடியுமா? காதல் படங்கள் எனக்கு செட் ஆகுமா ? என்றெல்லாம் தெரியவில்லை என பேசியிருந்தார். மேலும் அவர் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நாயகி இருந்தாலும் ரொமான்டிக் காட்சிகள், டூயட் பாடல்கள் எதுவும் இல்லை.

Related News