Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சூர்யா 47 குறித்து வெளியான தகவல்
சினிமா

சூர்யா 47 குறித்து வெளியான தகவல்

Share:

'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார்.

மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இது சூர்யா நடிப்பில் 47-வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனமான கலைப்புலி எஸ். தாணு (V Creations) மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து மேற்கொள்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும், கதாநாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News