Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இரத்த தானம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்
சினிமா

இரத்த தானம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்

Share:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.

மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். அதாவது, உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

அதன்பின் அருண் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்.

அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

Related News