Oct 24, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் வெளியிடப்படுகிறது பிரண்ட்ஸ் திரைப்படம்
சினிமா

மீண்டும் வெளியிடப்படுகிறது பிரண்ட்ஸ் திரைப்படம்

Share:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிகப் பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

தற்போது, விஜய் அரசியல் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். சூர்யா, விஜய் என பலர் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ்.

இப்படம் அப்போது வெளியாகி மிக பெரிய வெற்றியடைந்தது. சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருந்தார்.

பிரண்ட்ஸ் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, நவம்பர் 21ம் தேதி Friends திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. 

Related News