இந்தியா, ஜூலை 5-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முதல் முறையாக இயக்கவுள்ளார் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் தொடங்கி லியோ திரைப்படம் வரை தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களாக மாற்றிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். அவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. விரைவில் கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து, உலக அளவில் 640 கோடி ரூபாய் வசூல் செய்த மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் தான் நெல்சன்ரீத் குமார். மீண்டும் அவரோடு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையவுள்ளதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அவரது 171-வது திரைப்படமான "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் சென்னையிலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் கோலிவுட் ரசிகர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மூத்த மகள் பிரபல நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் அவர்கள் படபிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அவரோடு இணைந்து "இனிமேல்" என்ற ஒரு இசை ஆல்பத்தில் நடித்திருந்தனர்.