இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திற்காக, நடிகர் சிம்பு முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளாராம். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. படத்தின் தலைப்பு, கதை, நடிகர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய விவரங்களைத் தயாரிப்பு குழு தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. எனினும், இது வெற்றிமாறனின் 'வட சென்னை' உலகத்தைத் தழுவிய ஒரு படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இத்தகைய ஊகங்கள் வெளியாகினாலும், இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை. STR தனது வேலையை மீண்டும் தீவிரமாக எடுத்துக் கொள்வது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் எடையைக் குறைத்ததைப் பார்த்தாலே, இப்படத்தில் சிம்பு ஒரு மிக முக்கியமான, ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்பது தெரிகிறது.
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் இணையும் இந்த புதிய முயற்சி, ரசிகர்களை உறுதியாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.