Oct 20, 2025
Thisaigal NewsYouTube
முரசொலி செல்வம் மரணம்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்யின் மனைவி சங்கீதா
சினிமா

முரசொலி செல்வம் மரணம்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்யின் மனைவி சங்கீதா

Share:

விஜய் - சங்கீதா

நடிகரும், தவெக அரசியல் கட்சியின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதாவை கடந்த சில ஆண்டுகளாகவே வெளியே காணமுடிவது இல்லை.

தனது கணவர் விஜய்யின் பட இசை வெளியிட்டு விழாவிற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த சங்கீதா, மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் உலா வருகிறது. கடந்த சில மாதங்கள் முன் இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில் தற்போது முரசொலி செல்வம் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முரசொலி செல்வம் மறைவு

கருணாநிதி மருமகன் முரசொலி செல்வம் நேற்று மரணமடைந்தார். இவருடைய வயது 85. திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் இவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

https://twitter.com/i/status/1844431878566359253

Related News